ராமநாதபுரம் : தாலிக்கட்ட தயாரான மணமகன்.! மணமகள் எடுத்த விபரித முடிவு - நடந்தது என்ன?
bride stop marriage in ramanathapuram
தாலிக்கட்ட தயாரான மணமகன்.! மணமகள் எடுத்த விபரித முடிவு - நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் வெளிநாட்டில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவருக்கும், திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும் முடிவு செய்திருந்தனர். அதன் படி தொடர்ந்து இருவருக்கும் திருவாடானையில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், முகூர்த்த நேரம் நெருங்கி மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு சென்ற போது, மணப்பெண் திடீரென தாலியை பிடுங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மாப்பிள்ளையிடம் தாலியைக் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் மணப்பெண் தாலியை கொடுக்க மறுத்ததுடன், தாலியை உண்டியலில் போடப்போவதாகவும் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்ததை மணமகன் சம்பவம் குறித்து காவல்துறையில் இது குறித்து புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் திருமணத்திற்காக மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், திருமணம் நின்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மணப்பெண்ணும் தன்னுடைய விருப்பம் இல்லாமல் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து விட்டதாக புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
bride stop marriage in ramanathapuram