கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் ஏழு பேர் மாயம்!
Breaking News Kallakurichi Kalvarayan Malai Police Missing
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயமான போலீசார் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், சக போலீசார் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 போலீசாரில் 13 பேர், உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறினர். மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சம், மாயமான 7 பேரும் திருச்சி பட்டாலியனை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் ஊரில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச் சாராயம் அருந்தியதில் பலர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகினர். தற்போதுவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்துவரும் போலீசார், இதுவரை 12 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Breaking News Kallakurichi Kalvarayan Malai Police Missing