அடுத்த அதிர்ச்சி! கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!
Breaking News Cuddalore PMK Executive Attacked TN Police
கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு சமயம் நிகழ்ந்துள்ளது. பலத்த காயங்களுடன் மீட்பட்டுள்ள பாமக பிரமுகர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர். பாமகவை சேர்ந்த இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அறிவாளால் வெட்டியுள்ளனர்.
உயிர்க்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பாமகவினரும், சிவகுமாரின் உறவினர்களும் குவிந்து வருகின்றனர்.
பாமக பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கொண்ட மர்ம குமபலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த தாக்குல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பிரமுகர் ராஜ் சத்யன், "அரசியல் கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் இருந்து ஓய்வு இல்லை, பல கொலைகாரர்கள் தப்பி ஓடினாலும், பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரின் வீடு அருகேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறிய நிலையில், இன்று கடலூரில் பாமக பிரமுகர் மீது கொடூர தாக்கத்தால் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், அதுவும் ஒரு தலித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது, தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு மீதான கேள்வியை எழுப்ப்பியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், மீண்டும் இப்படியான ஒரு தாக்குதல் அரங்கேறியுள்ளது.
English Summary
Breaking News Cuddalore PMK Executive Attacked TN Police