நம்பி வந்த கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்த இளைஞர்.. தந்தை, மகன் கைது.! - Seithipunal
Seithipunal


நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் சிவக்குமார் (வயது 20). இதில், சிவக்குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி பைபர் படகு பழுது நீக்கும் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி நாகர்கோயிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிகள் படித்து வரும் தனது உறவுக்கார பெண்ணை அக்காவின் மகளுக்கு பிறந்தநாள் எனக்கு ஒரு மணவாளக்குறிச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அதன் பின்னர் மயக்கத்தில் இருந்த இளம் பெண்ணை சிவகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

பல நாட்கள் ஆகியும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி குறைச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது பாலியல் வன்கொடுமை திருமணம் செய்வதாக கூறி நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளை கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உடனடியாக இருந்த சிவகுமாரின் தந்தை பால்ராஜ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy give to drink cheat and rape college girl in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->