அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல் - அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பு.!!
bomb thread to anna university in chennai
சமீப காலமாகவே பொது இடங்கள், விமான நிலையங்கள், கல்லூரிகள் உள்பட அனைத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவதும், சோதனைக்கு பின் அது புரளி என்பதும் தெரிய வருகிறது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனே இந்த மின் அஞ்சல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் படி போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரைக்கும் மொத்தம் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
bomb thread to anna university in chennai