செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அழுகி கிடக்கும் உடல்கள் - காரணம் என்ன?
bodies decomposing in chengalpat government hospital
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அழுகி கிடக்கும் உடல்கள் - காரணம் என்ன?
செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் உள் நோயாளிகளாகவும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளிநோயாளியாகவும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அந்த அளவிற்கு இந்த மருத்துவமனையில் மிகப்பெரிய பிணவறையும் உள்ளது. இந்த பிணவறையில், இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க போதிய வசதியில்லாததன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய பிணவறையை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

இந்த மருத்துவமனையில், உயிரிழப்பவர்களின் உடல்களை பாதுகாப்பதற்காக சுமார் 40 குளிரூட்டி அறைகள் உள்ளன. இருப்பினும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு உடல்கள் கொண்டு வரப்படுவதால் இந்த 40 குளிரூட்டிகளும் நிரம்பிவிடுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்களை வைப்பதற்கு போதிய இட வசதியின்மை இல்லாத காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட உடல்களை இருக்கைகள் இல்லாமல் பாதுகாப்பின்றி குவியல் குவியல்களாக மூட்டைகளில் வைத்துள்ளனர்.
இதனால், உடல்கள் அழுகி மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றியிள்ள பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையை சுற்றி வசிக்கும் பொதுமக்களும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோரும் "தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
bodies decomposing in chengalpat government hospital