விருதுநகார் || வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா - பாஜகவினரால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விருதுநகர் தந்தி மரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டையை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வழங்கியுள்ளார். 

இதுதொடர்பான விவகாரத்தில் பாஜகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் இரு கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் உள்பட பாஜக தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அலுவலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் ராதிகா உள்பட நிர்வாகிகள் பலரும் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp tharna in viruthunagar rdo office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->