நாளை மாலை நேரம் குறித்த பாஜக தலைவர் எல்.முருகன்..பொதுமக்களுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேல் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர்.

எனவே முருகரையும் முருகரை போற்றி புகழ்ந்து பாடும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கயவர் கூட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் தீமைகள் விலகவும், நல்லன நிகழவும், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆடி மாதம் சஷ்டி தினமான 2020 ஆகஸ்டு 09 அன்று மாலை 6 மணிக்கு அவரவர் இல்லங்களில் விளக்கேற்றி கந்த சஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபட தமிழக பாஜகவும் மற்றும் அதன் பரிவார் அமைப்புகள் அழைக்கிறது, அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp state leader murugan announced protest for murugan


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal