#BigBreaking: பாஜகவில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் அறிவிப்பு.. ஆபாச வீடியோ குற்றச்சாட்டுக்கும் மறுப்பு..!!
BJP KT Raghavan Resign BJP Party Post Sexual Speech Video Leaked Social Media Issue
ஆபாச வீடியோ வெளியாகியதை தொடர்ந்து, பாஜக கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.டி ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்றும், ஆபாசமாக செய்கைகள் செய்து பாலின உணர்ச்சியை ஏற்படுத்துவது போன்றும் உள்ள வீடியோ இன்று சமூக வலைத்தளத்தில் பத்திரிகையாளர் மதன் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பாஜகவின் பல முக்கிய புள்ளிகள் பெண்களிடம் இதுபோல் அத்துமீறி இருப்பதாகவும், தனியார் விடுதிகளுக்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இந்த விடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக பாஜக தலைவரான அண்ணாமலையிடமும் சென்று விஷயத்தை தெரிவித்த நிலையில், அவர் கட்சி தலைமை வரை விஷயத்தை தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும். ஆகையால், விடியோவை வெளியிட்டு கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் மதன் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கே.டி ராகவன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்... என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்... நான் 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.. இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்..
என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்! " என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெண்களிடம் அத்துமீறிய அல்லது பெண்களை போகப்பொருளாக நினைத்து உபயோகித்த பல அரசியல் வாதிகள் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி, பின்னர் தனது அரசியல் பலத்தால் பல சம்பவங்களை அரங்கேற்றிய வரலாறுகள் உள்ள நிலையில், பாஜகவின் கே.டி. ராகவன் என்ன செய்யப்போகிறார் என்ற எண்ணமும் அரசியல் களத்தினை பரபரப்பாக மாற்றியுள்ளது.
கே.டி ராகவன் கூறியதை போல தர்மம் வெல்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: பாஜக கே.டி ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியானது... பரபரப்பில் தமிழக அரசியல்களம்.!
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
BJP KT Raghavan Resign BJP Party Post Sexual Speech Video Leaked Social Media Issue