பாஜக கே.டி ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியானது... பரபரப்பில் தமிழக அரசியல்களம்.!
BJP KT Raghawan Speech with Woman Abusing Words and Sexual Torture Video
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் கே.டி ராகவன். இவர் தற்போது பெண்ணிடம் ஆபாசமான உரையாடல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.டி ராகவன், அரைநிர்வாணத்துடன் பெண்ணுடன் ஆபாசமாக உரையாடுகிறார். இது குறித்த உரையாடலில் ஆடியோ சரியான அளவு வெளியான வீடியோவில் கேட்கவில்லை என்றாலும், கே.டி ராகவன் செய்யும் ஆபாச செய்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது உடல் அங்கங்களை தொட்டு ஆபாச செய்கையில் ஈடுபடும் கே.டி. ராகவன், எப்படி காம ரீதியான பேச்சுக்களை பேசியிருப்பார் என எண்ணிப்பார்த்தாலே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. இந்த விடியோவை வெளியிட்டுள்ள மதன், இது தொடர்பான தகவலை கட்சி தலைமையான அண்ணாமலையிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணாமலை தரப்பில் சட்டப்படி கட்சி தலைமைக்கு தகவலை தெரிவித்து நடவடிக்கை எடுக்க குறைந்தது 6 மாத காலம் ஆகும் என்பதால், விடியோவை நீங்கள் பதிவிட்டு கொள்ளுங்கள். பெண்களுக்கு எதிரான விஷயத்தில் சமரசம் கிடையாது. நீங்கள் விடியோவை பதிவு செய்துகொள்ளுங்கள் என்று அண்ணாமலை கூறியதாகவும் மதன் தெரிவிக்கிறார்.
பாஜகவை பொறுத்த வரையில் முக்கிய பொறுப்பில் இருந்து, சிறிய பொறுப்புகள் வரை பெண்களுக்கு இதுபோன்ற அத்துமீறல் நடப்பதாகவும், இது போன்ற செயல்களில் பல பாஜக பிரமுகர்கள் ஈடுபட்டு வருவதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இதனை ஊடகங்கள் மற்றும் பொதுவெளிகளில் இருந்து மறைக்க பாஜகவினர் கொலை மிரட்டல், கொலை, பாதிக்கப்பட்ட பெண்ணை அல்லது அவரது ஆதரவான நபர் யாரோ ஒருவரை கொலை செய்து, மாற்று புகாரை அவரின் மீது பதிவு செய்யலாம், இது வடமாநிலங்களில் பாஜகவினர் கையாளும் நடவடிக்கை வேண்டும் வீடியோவில் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல கட்சி பிரமுகர்களும் வரிசையில் சிக்குவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அல்லது வீடியோவை வெளியிட்ட மதன் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு பிரச்சனை அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க பாஜகவினர் மட்டுமே காரணம் என்றும், பாஜகவும்-திமுகவும் சில விஷயங்களில் ஒன்று தான் என்றும் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
BJP KT Raghawan Speech with Woman Abusing Words and Sexual Torture Video