தெருக் குப்பையில் கிடந்த ஆண் சிசு உடல் - திருநெல்வேலியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே நேற்று தூய்மை பணியாளர்கள் வழக்கமாக குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ராஜாநகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடல் கிடந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் சம்பவம் குறித்து உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். 

அதில், பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண்சிசு உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதனையடுத்து சிசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த குழந்தையின் தாய் யார்?, கள்ளக்காதல் விவகாரத்தில் இந்தக் குழந்தை பிறந்ததால் கொன்று விட்டு வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதுனும் காரணம் உள்ளதா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby body found in garbage in tirunelveli


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->