ஆயுதபூஜை எதிரொலி | 5 நாள்... வெளியான பரபரப்பு சுற்றறிக்கை! - Seithipunal
Seithipunal


ஆயுத பூஜை நேரத்தில் அரசு போக்குவரத்து துறை ஒட்டுனர் மற்றும் நடத்துனர் விடுப்பு எடுக்க கூடாது என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த சுற்றறிக்கையில், 23 .10 .2023 அன்று ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் 20 .10 .2023 முதல் 25 .10 .2023 வரை பயணிகள் அடர்வு அதிகமாக இருப்பதால், சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டி உள்ளது.

எனவே அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் வழங்க இயலாது என்றும் வெளியான அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு ஆப்ஷன் ரிப்போர்ட் அனுப்பி சட்ட பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் இந்த சுற்றறிக்கையில் விடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayudhapooja leave tngovt Bus


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->