பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்! 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!
auto overturn 5 students injured
கள்ளக்குறிச்சி, திருநாவலூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கொடிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.
அதுபோல் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று காலை ஆட்டோவில் பள்ளிக்கு புறப்பட்டனர்.
இந்த ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 38) என்பவர் ஓட்டுச் சென்றார். பள்ளி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த பள்ளத்திற்குள் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் மாணவர்களையும் ஆட்டோ ஓட்டுநரையும் மீட்டனர்.

இந்த விபத்தினால் ஓட்டுநர் உள்பட 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அவசர ஊர்தி மூலம் திருநாவலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
auto overturn 5 students injured