வலைகளை சேதப்படுத்திய கும்பல்! மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்! - Seithipunal
Seithipunal


வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலோரப் பகுதிகளில் பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் வலையை பயன்படுத்தி மீன்பிடித்து  கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆற்காட்டுதுறை மீனவர்களை தாக்கி வலை மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஆற்காட்டுதுறை மீனவர்கள் வலைகளை சேதப்படுத்திய நாகை விசைப்படகு மீனவர்களை கண்டித்தும், இழுவை மடிவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆறு காட்டு துறை கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து விட்டு கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் ரூபாய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இதை தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arukattu Thurai fishermen strike for the second day


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->