என்னையும் கைது பண்ணுங்க ஸ்டாலின்! இந்திய அளவில் ட்ரண்ட் ஆன ஹேஷ் டேக்! - Seithipunal
Seithipunal


அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் செந்தில், கவுண்டமணி காமெடியை வைத்து, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் தியாகராஜனும் இப்படித்தான் தேர்ந்தெடுத்ததாக மீம்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவில் பெண்களை இழிவு படுத்துவதாக கூறி திமுகவினர் கொந்தளித்து,  சம்பந்தப்பட்டவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இன்று கும்முடிபூண்டி அருகே வைத்து சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப்-யை கைது செய்தனர்.

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள சவுக்கு சங்கர், என்னையும் கைது செய்யுங்கள் ஸ்டாலின் (#ArrestMeToo_Stalin) என்ற ஹேஷ் டேக்கையும் புதிதாக உருவாக்கி பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, சவுக்கு சங்கரின் ரசிகர்கள், அதிமுகவினர், பாஜகவினர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், 'என்னையும் கைது செய்யுங்கள் ஸ்டாலின்' (#ArrestMeToo_Stalin) என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த #ArrestMeToo_Stalin ஹேஷ் டெக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளின் உள்பொருளை சுருக்கமாக தொகுத்து கீழ் காணாதவாறு கொடுக்கப்படுகிறது.

கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்படும் ''அனைத்து'' குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற அறிவிப்பு.

ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் பேசிய தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், வரும் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

சொன்னது போலவே நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என்று அமைச்சர் தியாகராஜன் அறிவித்தார்.

ஆனால் "தகுதி உள்ள பயனாளிகளுக்கு" அதாவது தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஒரு நிபந்தனையையும் அமைச்சர் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இது மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளின் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது மக்களை ஏமாற்ற "அனைத்து" குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் என்று ஸ்டாலினும், திமுகவும் பிரச்சாரம் செய்தார்களா? பொய் சொல்லி இப்படி ஏமாற்றலாமா? தற்போது எந்த அடிப்படையில் தகுதியை இவர்கள் நிர்ணயம் செய்வார்கள்? 

தகுதி வாய்ந்த பயனாளர்களுக்கு மட்டுமே இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களை ஏமாற்றும் நயவஞ்சக செயல் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த #ArrestMeToo_Stalin ஹேஷ் டெக்கில் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

மேலும், சமூக நீதிப் பேசக்கூடிய ஒரு அரசாங்கம், குடும்பத் தலைவிகளுக்கு தகுதியை தேடுவது கேலிக்கூத்தாக உள்ளதாக பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைவருக்கும் அனைத்தும், எல்லாருக்கும் எல்லாம் என்று அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் எந்த அடிப்படையில் தகுதியை இவர் தேர்ந்தெடுக்கிறார்? எப்படி தேர்வு செய்வார்? என்ற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrest Me Too Stalin


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->