இடப்பிரச்சனை - பக்கத்து வீட்டுக் காரரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் கைது.!!
army man arrested for murder case in theni
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன். இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டபோது, கோபமடைந்த ராணுவ வீரர் பார்த்திபன் எதிர்வீட்டைச் சேர்ந்த சுந்தர் அவருடைய மனைவி சுதா, மாமனார் முத்துமாயன் ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் முத்துமாயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சுந்தர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சுதா உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் ராணுவ வீரர் பார்த்திபன், அவரது தந்தை ராஜேந்திரன் தாயார் விஜயா உள்ளிட்ட மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
army man arrested for murder case in theni