அரியலூர் பெண் கொடூர கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் கீழப்பழுவூர் வ.உ.சி நகரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி மலர்கொடி (வயது 49). காமராஜ் கடந்த இருபது வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், மலர்கொடி தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். மலர்கொடி மாடுகள் வளர்த்து அப்பகுதி மக்களுக்கு பால் கறந்து விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். 

இவரது மகன் கலைவாணன் (வயது 25), காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், காய்கறி லோடு ஏற்றுவதற்காக கலைவாணன் திருச்சிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் மலர்கொடி மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த 24 ஆம் தேதியன்று அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், மலர்க்கொடி பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவரது தலை நசுக்கப்பட்டு, உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதையும், வயிறு கிழிந்து குடல் சரிந்து மிகவும் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டுள்ளனர். இது தொடர்பாக 50 க்கும் மேற்பட்டவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரித்தனர். 

இதில், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவில் சீமை கிராமத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விஜயபாஸ்கரின் மீது 40 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இவர் திருடிய நகைகளை பேச்சியம்மாள் என்பவர் மூலமாக விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில், மலர்கொடி இறந்து கிடந்த இடத்தில் எக்ஸ்.எல் வண்டி சாவி இருந்துள்ளது. 

இதன்பின்னர் நடைபெற்ற விசாரணையில், கொலை நடந்த அன்று இரவு விஜயபாஸ்கர் கீழப்பழுவூர் வந்ததும் உறுதியானது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பேச்சியம்மாளுடன் ஏற்பட்ட தகராறில் மது போதையில் மலர்கொடியை கொடூர கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஜயபாஸ்கரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur girl murder mystery discovers by police


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal