போலீஸ் உடன் வாக்குவாதம்! அரசு பேருந்து கண்ணாடி உடைப்பால் சாலை மறியலில் பொதுமக்கள்!
Argument with police Public blockades road after government bus window breaks
விழுப்புரத்தில் மயிலம் பகுதியில் இருந்து இன்று காலை அரசு பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பயணிகள் ஏராளமானோர் இருந்தனர்.இதன் காரணமாக பேருந்தில் கூட்டம் அதிகரித்து காட்சியளித்தது.

இந்த சூழலில், அந்த பேருந்து காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அங்கு பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் அரசு பேருந்து மீது கல்லை கொண்டு ஏறிந்து கோபத்தை வெளிக்காட்டினார்கள்.
இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் காவலர்கள், பேருந்து கண்ணாடியை உடைத்தாக அங்கிருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது பொதுமக்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்ததோடு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். இதனையடுத்து காவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கூட்டத்தை கலைத்துக் கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Argument with police Public blockades road after government bus window breaks