காலமானார் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஷிபு சோரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

81 வயதான ஷிபு சோரன், கடந்த 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்து வந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

இதற்கிடையே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தலைநகர் டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மகனும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது தந்தையின் மரணச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அந்தப் பதிவில், "அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jarkhant ex cm shibu soren passed away


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->