கைத்தறி போர்வையில் இடம் பெற்ற சிவகார்திகேயன் மற்றும் மேஜர் முகுந்த் படம்.!!  
                                    
                                    
                                   sivakarthikeyan and mejar mukunth photo print in sennimalai bedsheet
 
                                 
                               
                                
                                      
                                            ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் கைத்தறி மூலம் போர்வை தயாரிக்கப்படுகிறது. இந்தப் போர்வை உலக அளவில் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
இங்குக் கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய அதாவது காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டுள்ளது.
இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து பரிசாக வழங்கியுள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       sivakarthikeyan and mejar mukunth photo print in sennimalai bedsheet