அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! 
                                    
                                    
                                   ADMK Senkottaiyan dismissed 
 
                                 
                               
                                
                                      
                                            
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; 
கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், 
அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், 
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த K.A. செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       ADMK Senkottaiyan dismissed