அமைச்சர் ஆனார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்!
Telangana Congress Cabinet Mohammad Azharuddin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான முகமது அசாருதீன் தெலுங்கானா மாநில அரசின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அசாருதீன், அதன் பின் கட்சியின் பல்வேறு பதவிகளில் செயல்பட்டார். தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது, ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். மாநில மந்திரிசபை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அசாருதீனும் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ளார். அவர் நியமன மந்திரியாக நியமிக்கப்பட்டு இன்று பதவியேற்றார்.
அசாருதீனின் அரசியல் பயணம் தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. காங்கிரஸ் சார்பில் பல்வேறு பிரச்சாரங்களில் அவர் செயல்பட்டு வருகிறார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அவர் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் நியமனம், அரசியல் மற்றும் விளையாட்டு துறையில் அவருக்குள்ள மக்கள்மத்தி பிரபலத்தால் கட்சிக்கு வலுசேர்க்கும் என கருதப்படுகிறது.
English Summary
Telangana Congress Cabinet Mohammad Azharuddin