வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
low pressure area forming over Bay of Benga
மத்தியகிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப் பகுதி நவம்பர் 2-ஆம் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தற்போது மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, குஜராத் கடலோரத்தை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
இதனுடன் தெற்கு மியான்மர் கடலோரம் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மத்தியகிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் மேலும் தெரிவித்ததாவது, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகு அதன் நகர்வு, வலிமை, மற்றும் தமிழகத்தில் ஏற்படும் மழை வாய்ப்பு குறித்து அடுத்த சில நாட்களில் தெளிவான தகவல் வெளியிடப்படும்.
English Summary
low pressure area forming over Bay of Benga