முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி நடைபெற்றுவருகிறது. இருப்பினும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், டெல்லி மாநிலத்தில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை சமீபத்தில் பிறப்பித்தது. இந்த சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அமைந்ததால், அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதேபோல் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும், கெஜ்ரிவால் நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலத்தின் முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

அந்தவகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் சண்டிகாரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தடைந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசுகிறார். 

அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் பாதகம் குறித்தும், மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி ஆதரவு கேட்க உள்ளார்.

இந்த சந்திப்பு நிறைவு பெற்ற பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விமானத்தின் மூலம் இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றடைகின்றார். அங்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரனை நாளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravind kejriwal meet chief minister mk stalin today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->