இதற்கு இது பதில் இல்லையே.!! மின்சார வாரியத்தை பங்கம் செய்த அறப்போர் இயக்கம்.!!
Arappor iyakkam criticized TANGEDCO
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக கொள்முதல் செய்யப்பட்ட ட்ரான்ஸ்பார்மர் டென்டரில் சுமார் 400 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்ற உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்திருந்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விளக்கத்திற்கு அறப்போர் இயக்கம் மீண்டும் பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில் மின்சார வாரியத்தின் விளக்கத்தை விமர்சிக்கும் விதமாக அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஊழல் குற்றச்சாட்டுக்கு இந்த மாதிரி ஒரு பதிலை இது வரை எந்த அரசும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து சதி செய்து டெண்டர் கொடுப்பதன் நோக்கத்தையே சிதைத்துள்ளார்கள். இந்த டெண்டர்களை ரத்து செய்யாமல் அவர்களுக்கு பங்கு போட்டு கொடுத்துவிட்டு இதெல்லாம் கடந்த ஆட்சியில் கூட தான் நடந்தது என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பதில் சொல்லி இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் டெண்டர்களை செட்டிங் செய்திருந்தால் அதை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதறக்கு பதிலாக அவர்கள் ஊழல் செய்ததால் நாங்களும் ஊழல் செய்கிறோம் என்று ஒரு மாநில அரசாங்கம் பகிரங்கமாக ஒப்புக் கொள்வது எத்தனை பெரிய அவமானம்.!
இந்த மோசமான கூட்டுச்சதியை 'இதெல்லாம் மின்சார வாரியத்தில் சாதாரணமப்பா' என்று Normalize செய்வது பொதுமக்களுக்கு செய்யும் கடைந்தெடுத்த துரோகம். அறப்போர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் போது இந்த பதிலை நீதிபதி முன்னால் வந்து எப்படி சொல்ல போகிறார்கள் என்று பார்க்கலாம்"என தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த விளக்கத்தை அறப்போர் இயக்கம் கலாய்த்து உள்ளது.
English Summary
Arappor iyakkam criticized TANGEDCO