மகளிருக்கென பிரத்யேக வசதிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு.. அறிமுகப்படுத்தியது டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முதன்முறையாக, மகளிருக்கென பிரத்யேக வசதிகள் கொண்ட ‘பிராஸ்பெரா பை டேக்’ என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை அறிமுகப்படுத்துகிறது டேக் டெவலப்பர்ஸ்!

சென்னையைச் சேர்ந்த டேக் டெவலப்பர்ஸ்  நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக, மகளிருக்கென பிரத்யேக வசதிகள் கொண்ட ‘பிராஸ்பெரா பை டேக்’  என்னும் குடியிருப்பு வளாகத்தை போரூரில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பொழுதுபோக்கு, பேசிப் பழகுவதற்காகன ‘ஷீ-கார்னர்’ என்னும் உள்ளரங்கம், கேமரா கண்காணிப்பு வசதி கொண்ட குழந்தைகள் காப்பகம், பெண்கள் உடற்பயிற்சி கூடம் போன்ற தனித்துவமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதனையொட்டி இந்தக் குடியிருப்பு வளாகத்தில் பிரபலப் பின்னணி பாடகியும் - நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரெமையாவின் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்கிற பெயரில் உற்சாகமளிக்கும் நேரடி இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் டேக் டெவலப்பர்ஸின் வாடிக்கையாளர்கள் உட்பட 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் இந்நிகழ்வில் மாஃபா நிறுவனத்தின் இயக்குனர் திருமதி லதா பாண்டியராஜன், நார்த்தர்ன் யு.என்.ஐ. இந்தியா அமைப்பின் இயக்குனர் முனைவர் சரண்யா ஜெய்குமார், நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி வீணா குமாரவேல் உள்ளிட்ட முக்கிய பெண் ஆளுமைகளுக்கு அவர்களது துறைகளில் அவர்கள் நல்கிய தனித்துவ பங்களிப்புக்கு அங்கீகாரமாக விருதுகளும் வழங்கப்பட்டன. 

குறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் . எஸ். சதீஷ் குமார் கூறுகையில், “ஆண்ட்ரியா ஜெரெமையா ஆத்மார்த்தமாக வழங்கிய மாலைப் பொழுதின் மயக்கத்திலே” நிகழ்ச்சியை நடத்தியதில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும்  லதா பாண்டியராஜன், முனைவர் சரண்யா ஜெய்குமார் மற்றும்  வீணா குமாரவேல் போன்ற ஊக்கமளிக்கும் பெண் சாதனையாளர்களை அங்கீகரிப்பது, உண்மையிலேயே எங்களுக்கு கௌரவம் ஆகும். ‘பிராஸ்பெரா பை டேக்’ அறிமுகத்திற்கு முந்தைய நிகழ்வில் அவர்களின் வாழ்க்கை பயணங்களைக் கொண்டாடிய இந்த நிகழ்வு, பெண்களுக்கு அதிகாரமளித்தலை பெரிதாக மதிக்கும் எங்கள் குழுவை சிறப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது  என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Apartments with special facilities for women Launched by Tag Developers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->