பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்கி, நெகிழவைக்கும் அம்மா உணவகம் - ஊரடங்கிலும் நெகிழ்ச்சி.!!
Amma Unavagam Make food Lockdown Days its Useful to Peoples 25 April 2021
தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
ஊரடங்கு நாட்களில் கடைகள், வணிக வளாகங்கள், அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் நடமாட தடை என பல உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்கள் உணவை எண்ணி சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அம்மா உணவக திட்டம் மூலமாக, பல்வேறு நகரங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் மூலமாக பலரும் குறைந்த தொகையில் தங்களின் பசியை தீர்த்துக்கொண்டனர்.

இந்நிலையில், முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள 400 க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படுகிறது. இதனால் அந்த அம்மா உணவகத்திற்கு அருகே இருக்கும் பொதுமக்கள் காலையில் சென்று தங்களுக்கான உணவுகளை பார்சல் மூலமாகவும், பார்சல் வாங்க இயலாத சிலர் அங்கேயே உணவுகளை வாங்கி சாப்பிட்டும் தங்களின் பசியை போக்கிக்கொண்டனர்.
இதனைப்போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், வெளியூரில் தங்கி பணியாற்றி வரும் நபர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அம்மா உணவகம் மூலமாக தங்களின் பசியை போக்கிக்கொள்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Amma Unavagam Make food Lockdown Days its Useful to Peoples 25 April 2021