அஜித்குமார் வழக்கில் கட்டப்பஞ்சாயத்து! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அதிமுக!
ajithkumar case admk video
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருப்புவனம் அஜித்குமார் காவல் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்.
அஜித்குமார் உடலை வாங்க மறுத்து வந்த சமயத்தில், காவல்துறை அவரது உறவினர்களை மண்டபத்தில் வைத்து "பணம் தருகிறோம்.. போராட வேண்டாம்" என கட்டப்பஞ்சாயத்து செய்ததை அதனை ஊர்மக்கள் படம்பிடித்த போது காவல்துறையினர் தடுக்க முயன்றதால் பிரச்சனை ஏற்பட்டது.
எதற்கு அவர்களை மண்டபத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும்? யாரைக் காப்பாற்ற இந்த முயற்சியை எடுத்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை?
காவல்துறை மீது எந்தவித கட்டுப்பாடும் பொம்மை முதல்வருக்கு இல்லை என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா?
அஇஅதிமுக கூட்டணியின் தொடர் எதிர்ப்பால் மட்டுமே இந்த வழக்கு CBI-க்கு மாற்றியிருக்கின்றனர். இல்லையேல், வழக்கை நீர்த்துப் போகவே இந்த அரசு முயற்சித்து இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ajithkumar case admk video