குறைதீர் சொல்ல வந்தவர்களுக்கு ஷாக்.. அதிமுக எம்எல்ஏ செய்த சம்பவம்!!
AIADMK MLA gave meals to farmers in Sivaganga collector office
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் குறைகளை கூற வாரம் தோறும் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேபோன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் தங்கள் குறைகளை கூற இந்த குறைதீர்க்க கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதிமுகவைச் சேர்ந்த செந்தில்நாதன் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்தார். பிற்பகல் வரை நடந்த இந்த கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் அறுசுவை விருந்து வழங்கி அசத்தி உள்ளார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத விவசாயிகள் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.
English Summary
AIADMK MLA gave meals to farmers in Sivaganga collector office