காதல் கணவனை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கடைசியில் பெண் போலீஸ்சுக்கு நேர்ந்த பரபரப்பு தகவல்கள்! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலன் பற்றி கணவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா, ஆவடிஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன்  என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முகிலனும், சோனியாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் முகிலனுடன் அவரது மகள் இருந்தாள். இதற்கிடையே சோனியா சொந்த ஊரான கொங்கராயனூருக்கு வந்த அவர், கணவன் முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு மகளை பார்க்க வேண்டும் என கூறினார்.

இதையடுத்து முகிலன், சோனியா ஆகியோர் தங்கள் மகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி காலை சோனியா, முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்துவிட்டதாகவும், மகளை நன்றாக பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதை கேட்டு பதறிய முகிலன், சோனியாவை மீட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சோனியா தனது கையால் எழுதிய கடிதத்தை செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ்-அப் மூலம் கணவர் முகிலனுக்கு அனுப்பி உள்ளார். அதில், சென்னை ஆவடியில் பணிபுரிந்த எனக்கு, அங்குள்ள ஒரு போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டு  இருவரும் நெருங்கி பழகியதில், நான் 3 மாத கர்ப்பமானேன்.

அந்த நபர் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும், கணவர் முகிலனிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் எனவும், போலீஸ்காரர்  மிரட்டினார். இதுதொடர்பாக புகார் அளித்தபோது, உயர் அதிகாரிகள் என்னை மட்டுமே ஒருதலைபட்சமாக விசாரணை செய்தனர்.

மேலும் அதிகளவில் பணிச்சுமை வழங்கினர். இந்நிலையில் எனது கர்ப்பம் திடீரென கலைந்துவிட்டது. இதனால்  மனஉளைச்சலில் இருந்து வந்தேன். எனது சாவுக்கு காரணம் அந்த போலீஸ்காரர் மட்டுமே. மேலும் எனது குடும்பத்தினர், கணவர் மற்றும் மகள் யாரையும் விசாரிக்க வேண்டாம். இதுவே எனது மரண வாக்குமூலம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து முகிலன், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சோனியாவின் கள்ளக்காதலனான சென்னை ஆவடி ஆயுதப்படை போலீஸ்காரரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜீ மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After separating from her husband, indulging in an affair with a lover Finally shocking information regarding the woman reaching the police


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->