அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு இரு ஆண்டுகள் சிறைத்தணடனை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு வழங்கப்பட்ட நான்காண்டு சிறை தண்டனையை, இரண்டு ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1991 - 96 ஆம் ஆண்டு காலத்தில், சின்ன சேலம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஆர்பி பரமசிவம். 

இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 26 லட்சம் அளவு சொத்து சேர்த்ததாக, கடந்த 1998 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 2026 ஆம் ஆண்டு, பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

மேலும் பரமசிவம், அவரின் மனைவி (காலமானவர்) மற்றும் மகன்கள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுடமையாக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து பரமசிவன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பரமசிவத்துக்கு வழங்கப்பட்ட நான்காண்டு சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அபராத தொகை 33 லட்சம் ரூபாயில் இருந்து, 26 லட்சமாக குறைத்து உத்தரவிட்டார். மேலும் பரமசிவம் மற்றும் மனைவி, மகன் சொத்துக்களை முடக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும், கூடுதலாக வழங்கப்பட்ட அபராத தொகையை திருப்பி வழங்கும்படியும் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Ex MLA Paramasivam Case Chennai HC Judgement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->