வேறு வழியில்லை! உயர்நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி பழனிச்சாமி!
ADMK Edappadi Palanisamy Apeal to Chennai Hc for TN Assembly issue
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் பிடிவாதமாக இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 66 உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் தேர்வுசெய்யப்பட்டனர்.
பின்னர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே வெடித்த மோதல் முற்றி, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பினர் பொதுக் குழுவைக் கூட்டி ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கினர்.
மேலும், ஓ. பன்னீர்செல்வம் வகித்துவந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்றும், ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டதால், அவர்களை அ.தி.மு.க. உறுப்பினர்களாகக் கருதக்கூடாது என்றும் சபாநாகரிடம் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு, இருக்கை ஒதுக்கீடு செய்வது சபாநாயகரின் முற்றுரிமை என்று கூறி அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து வருகிறார்.
இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
English Summary
ADMK Edappadi Palanisamy Apeal to Chennai Hc for TN Assembly issue