கடலூரில் அதிமுக வேட்பாளர்! தரையில் அமர்ந்து தரிசனம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று கடலூர் வந்துள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில், அதிமுக வேட்பாளர் தென்னரசு தரையில் அமர்ந்து தரிசனம் மேற்கொண்டார்.

நேற்று மாலை உடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு திடீரென காலை சுமார் 7 மணி அளவில் விருதகிரீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார். 

அங்குள்ள சந்நிதிகளும்குச் சென்று தரிசனம் செய்த அவர், ஈரோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டி அவர் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.


மேலும் ஒரு அரசியல் செய்தி : எனக்கு 52 வயசு. இன்னமும் எனக்கென்று சொந்தமாக வீடு இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்து. வரும் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் இதனை தெரிவித்தார்.

அவரின் அந்த உரையில், "உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் உள்ள எங்கள் குடும்ப வீடு எங்களுடையது இல்லை. 52 வயதாகும் எனக்கு இன்னம் சொந்தமாக வீடு இல்லை" என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Candidate Viruthai Temple


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->