சென்னை விமான நிலையத்தில் குப்பைபோல் குவிந்துக் கிடக்கும் ஆதார், பான் கார்டுகள் - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் குப்பைபோல் குவிந்துக் கிடக்கும் ஆதார், பான் கார்டுகள் - நடந்தது என்ன? 

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் A6 என்ற வருகை பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ஏராளமான ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் பயணடிக்கட்டுடன், ஏதாவது ஒரு அடையாள அட்டையினை அதாவது ஆதார், பான் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை தொழில் பாதுகாப்பு படையினரிடம் காட்டிவிட்டு விமான நிலையத்திற்குள் செல்வது வழக்கம்.

அப்படி செல்லும் போது அவசர நேரத்தில் கையில் இருப்பதை தவறவிடுகின்றனர். அதனை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் முறையாக ஒப்படைப்பதில்லை. விமான நிலையத்தில் இதுபோல் தவறவிடப்படும் அடையாள அட்டைகளை, அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பினால், அந்த தபாலுக்கு உரிய கட்டணத்தை உரியவரிடமே பெற்றுக்கொள்ளும் நடைமுறை இந்திய அஞ்சல் துறையில் உள்ளது.

இந்த நடை முறையினை விமான நிலைய அதிகாரிகள் கடைபிடிக்காததால், விமான நிலைய பகுதியில் குப்பைகளாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொட்டிக்கிடக்கும் அந்த கார்டுகளை உரியவர்கள் எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை. இதனால் பயணிகள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதார் மற்றும் பான் கார்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் அதனை கொண்டு வேறு நபர்கள் தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அதற்கு இடமளிக்காத வகையில் விமானத்துறை அதிகாரிகள் உரியவர்களிடம் கார்டுகளை சேர்ப்பிக்கை வேண்டும்" என்று கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adhar and pan cards vestage side in chennai airports


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->