நடிகர்கள் போதைப்பொருள் வழக்கு:அதிகாரிகளுக்கு  பணம் கைமாறியதாக புகார்! - Seithipunal
Seithipunal


தமிகத்தில் நடிகர்கள் கைதான போதைப்பொருள் வழக்கில் தனிப்படையில் இடம் பெற்றிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார் எழுந்துள்ளது.

நாட்டில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, சமீப காலமாக விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சோதனை செய்யும் போது ஏராளமான போதை பொருட்கள் தங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது, குறிப்பாக இதுபோன்ற செயல்களில் நடிகை ஒருவர் சமீபத்தில் மாட்டிக் கொண்டார் அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார். 

இந்தநிலையில் 'கொகைன்' போதைப்பொருள் வழக்கில் சமீபத்தில் பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் வியாபாரி கெவின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதையடுத்து நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி  தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக பல  தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போதைப்பொருள் வழக்கை விசாரித்த தனிப்படையில் இடம் பெற்றிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் புகார் கூறப்பட்ட இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், அருள் மணி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது வருகிறது. விசாரணை முடிவில் இவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actors drug case Complaint that money was handed over to the authorities


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->