துக்க நிகழ்விலுமா? எல்லை மீறி போறீங்க! ஊடகங்கள் மீது பாய்ந்த திரைத்துறை! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அதனை யூடியூப் சேனல் முதல் செய்தி ஊடகங்கள் வரை அது குறித்தான செய்திகளை தொடர்ந்து இரண்டு நாட்களாக வெளியிட்டன.

மேலும் அந்த நிகழ்வு குறித்தான பல்வேறு கற்பனையான செய்திகளையும் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குனர் பாரதிராஜா கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக "சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த திரு மாரிமுத்து மற்றும் திரு விஜய் ஆண்டனி அவர்களின் மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. 

இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத்துறையினர் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே தவறான தகவலால்பரபரப்பாக்குவதும் அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் எந்த விதத்தில் நியாயப்படுத்துவது? 

கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்க வேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை? எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டில் எல்லைகளை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான சுயக்கட்டுப்பாட்டை ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதைகட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதை என் வேண்டுதல்" என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actors Association condemns media behavior during funeral procession


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->