நடிகர் திலகம் 'சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்ததினம்!.
Actor Thilagam'Sivaji Ganesans birthday
கலைத்தாயின் மூத்த மகன் நடிகர் திலகம் 'செவாலியே' திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்ததினம்!.
புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
தமிழ் திரையுலகில், பராசக்தி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது மற்றும் செவாலியே விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் தனது 74வது வயதில் 2001 ஜூலை 21 ஆம் தேதி அன்று மறைந்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் திரு.கோவிந்தப்ப வெங்கடசாமி அவர்கள் பிறந்ததினம்!.
டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy, அக்டோபர் 1, 1918 - ஜூலை 7, 2006) தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, வெங்கடசாமி 1945 முதல் 1948 வரை இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளில் யுத்த களங்களில் மருத்துவப் பணியாற்றினார்.
அரவிந்த் கண் மருத்துவமனையை மதுரையில் 11 படுக்கை வசதியுடன் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற ஊர்களிலும் கிளைகளை அமைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
வெங்கடசாமி 1973ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 1985ல் இலினாய் பல்கலைக் கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம், 1993ல் சர்வதேச பார்வைக்குறைவு தடுப்பு விருது, அமெரிக்கக் கண் மருத்துவக் கழகம், 1987ல் ஹெலன் கெல்லர் சர்வதேச விருது, 2001ல் மருத்துவர். பி. சி. ராய் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
வெங்கடசாமி ஒரு காந்தியராகவும், ஆன்மீக ஆசிரியர்களான ஸ்ரீ அரவிந்தோ மற்றும் அன்னையின் சீடராகவும் இருந்தார். இவர் தனது 87வது அகவையில் மதுரையில் மறைந்தார்.
English Summary
Actor Thilagam'Sivaji Ganesans birthday