எனது கணவரையும் தாக்குவார்களோ..  மாவட்ட செயலாளரின் மனைவி கண்ணீர்! - Seithipunal
Seithipunal


எனது கணவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என த.வெ.க. மாவட்ட செயலாளரின்கண்ணீருடன் கூறினார்.


கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை  பிரசாரம் மேற்கொண்டபோது  கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. 

கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில்,கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் த.வெ.க. மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவருடைய மனைவி ராணி நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் மதியழகன், விஜய் நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் இருந்தே அவரின் ரசிகராக இருந்து வருகிறார்.

கஇப்போது வரை வீடு திரும்பவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன். இப்போது எனது கணவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. காவல்துறையும் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று எனது கணவரையும் போலீசார் பயங்கரமாக தாக்குவார்களோ என்ற அச்சம் உள்ளது.

எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள். அவர் எப்படி இருக்கிறார் என்பதை சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள் என கண்ணீர் மல்க கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They might attack my husbandTears of the district secretarys wife


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->