400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கைது..சட்ட விரோத குடியேற்றம்: அமெரிக்கா நடவடிக்கை !
Over 400 Iranians arrested Illegal immigration U S takes action
சட்ட விரோத குடியேற்றம் தொடர்பாக அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்க கைது செய்யப்பட்டவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார் அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார் அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார் இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
இந்தநிலையில்சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்காக வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தால் குடியேற்ற துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றனர்.
அதன்படி ஈரானைச் சேர்ந்த 120 பேர் உரிய ஆவணங்கள் இன்றி அங்கு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குடியேற்ற துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு கைதான ஈரானியர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. இதனையடுத்து அவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே அவர்கள் அனைவரும் விரைவில் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
English Summary
Over 400 Iranians arrested Illegal immigration U S takes action