தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..ழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்!
3 people from Tamil Nadu died Tragedy while cleaning the septic tank
கேரளாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இதற்காக பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, அதனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொட்டிக்குள் இறங்கிய ஜெயராமன் என்ற பணியாளர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை மீட்பதற்காக சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகிய இருவர் தொட்டிக்குள் இறங்கிய நிலையில், அவர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கழிவுநீர் தொட்டிக்குள் சீக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களாலும் தொட்டிக்குள் செல்ல முடியாததால், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் 3 பணியாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் . இதில் ஜெயராமன் என்பவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் என்றும் அதே சமயம், சுந்தர பாண்டியன் மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
3 people from Tamil Nadu died Tragedy while cleaning the septic tank