மன்னிப்பு கேட்க மாட்டேன்:அடம்பிடிக்கும்  பாகிஸ்தான் மந்திரி! - Seithipunal
Seithipunal


ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஆசிய கோப்பையை தர புதிய நிபந்தனை விதித்த பாகிஸ்தான் மந்திரியால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது .அப்போது  இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி பரிசுக் கோப்பையை வழங்க இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்கமாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய அணி கூறியது.


ஆனால் இதனை ஏற்க மறுத்து  கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை. வெறுங்கையுடன் வெற்றியை கொண்டாடினர். இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷிலார் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பை பிரச்சினையை எழுப்பினர்.

அப்போது வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை வழங்க வேண்டும். இது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பையாகும். தனிப்பட்ட நபருக்கு சொந்தமானது கிடையாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் மொசின் நக்வி கோப்பையை வழங்கமாட்டோம் என்ற முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 

ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி, கோப்பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் , பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆசிய கோப்பையை பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் மந்திரி புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற பி.சி.சி.ஐ. ஆர்வமாக இருந்தால் என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் ஒருபோதும் BCCI-யிடம் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் மன்னிப்பு கேட்கவும் மாட்டேன்” என்று மொசின் நக்வி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will not apologize The obstinate Pakistani minister


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->