கடும் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு!
Severe earthquake Death toll rises to 60
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கதால் பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகிய போது மக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறு சாலைகளுக்குச் சென்றனர்.
நிலநடுக்கம் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் இருந்த சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்தசம்பவம் அந்த நாடை நிலைக்குலயை செய்துள்ளது.
English Summary
Severe earthquake Death toll rises to 60