‘காதல் ஒரு கண்ணாடி’ – தேவாவின் கானா வரிகளால் வியந்த கலைஞர்!அதிரவைத்த ராஜாதி ராஜா.!
Love is a Mirror The artist was amazed by Deva Kannada lyrics The king was impressed
தமிழ் திரையிசை உலகில் ‘கானா’ பாடல்களின் சக்கரவர்த்தி என்றே அழைக்கப்படுபவர் தேனிசைத் தென்றல் தேவா. 80-களில் தொடங்கிய அவரது இசைப் பயணம், 90’ஸ் கிட்ஸ் முதல் இன்றைய 2K தலைமுறை வரை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. ஜாலியான தாளங்களும் எளிமையான சொற்களும் தேவாவின் இசையின் அடையாளமாக இருந்தாலும், அந்தப் பாடல்களுக்குள் ஒளிந்திருக்கும் வாழ்வியல் தத்துவங்களே அவரது தனிச்சிறப்பு.
அத்தகைய ஒரு தருணம், தேவா இசையமைத்த ‘பெண் சிங்கம்’ படத்தின் பாடலுடன் தொடர்புடையது. அந்தப் படத்தில் இடம்பெற்ற“வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி” என்ற கானா பாடலை, ஒருமுறை கலைஞர் மு.கருணாநிதி கேட்க விரும்பியுள்ளார். பாடலில் வரும்,“எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி…அதை உடைச்சிடாம பாக்குறவன் கில்லாடி”
என்ற வரிகளைக் கேட்டதும் கலைஞர் கருணாநிதி அசர்ந்ததாக சொல்லப்படுகிறது. காதலை ஒரு கண்ணாடியுடன் ஒப்பிட்டு, அதை உடைக்காமல் பாதுகாப்பவனே உண்மையான வெற்றியாளன் என்ற கருத்தை இவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் சொன்ன விதம் அவரை பெரிதும் வியக்க வைத்துள்ளது. “இந்த ஸ்லாங்கை எப்படிப் பிடித்தாய்?” என்று தேவாவிடம் கலைஞர் ஆச்சரியத்துடன் கேட்ட அந்த நொடி, இன்று வரை இசை ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.
1986-ல் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, பின்னர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற மெகா ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை உறுதி செய்தார். ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்காக தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, இசையுலகில் ஒரு மாபெரும் சாதனையாளராக திகழ்கிறார்.
அண்மையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ‘தேவா தி தேவா’ (Deva The Deva) என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்த மேடையில், வயதை மீறிய உற்சாகத்துடன் தனது பழைய ஹிட் பாடல்களை பாடி, ரசிகர்களை நினைவுகளின் உலகில் பயணிக்க வைத்தார். அவரது காந்தக் குரலும், குறையாத இசை ஆற்றலும், அந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.
கலைஞரின் பாராட்டைப் பெற்ற கானா வரிகள் முதல், இன்றைய இளைஞர்களின் ‘அடிக்ஷன்’ பாடல்கள் வரை – தேவாவின் இசைப் பயணம் தமிழ் சினிமாவில் என்றும் தனித்துவமான பாதையையே கொண்டுள்ளது.
English Summary
Love is a Mirror The artist was amazed by Deva Kannada lyrics The king was impressed