பர்மிட் இல்லாத  ஆட்டோ மோதி உயிரிழப்பு ..தமிழர்களம் அழகர் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பர்மிட் இல்லாத  ஆட்டோ மோதி உயிரிழந்துள்ளார். இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களினால் ஏற்பட்டும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்தவொரு நிதி நிவாரணமும் கிடைப்பதில்லை என்று தமிழர்களம் கோ.அழகர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமிழர்களம் கோ.அழகர் கூறியிருப்பதாவது : புதுச்சேரியில் எந்த ஆவணங்களும் இல்லாத ஆட்டோகளினால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகள் மற்றும் படுகாயமடைபவர்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கடந்த வாரம் உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ராணி் என்பவர் சாலையில் நடந்து சென்றபோது பர்மிட் இல்லாத  ஆட்டோ மோதி உயிரிழந்துள்ளார். இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களினால் ஏற்பட்டும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்தவொரு நிதி நிவாரணமும் கிடைப்பதில்லை!

இதையெல்லாம் தெரிந்தும் புதுச்சேரி சாலை போக்குவரத்துறை (RTO) மற்றும் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் கண்டுக்கொள்ளாமல் இப்படிப்பட்ட ஆட்டோக்கள் இயங்குவதை வேடிக்கை பார்ப்பது கண்டிக்கதக்கது.

ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்களினால் ஏற்படும் விபத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் அவர்களது சொந்த பணத்தில் இழப்பீடு வழங்க பொறுப்பேற்க வேண்டும். அல்லது அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு இழப்பீடுகள் வழங்க முன்வரவேண்டும்.  என்று பொதுநல   அமைப்புகள் ஒன்றினைந்து
 RTO அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். செய்தியறிந்த உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் அங்கே வந்து அதிகாரிகளை அழைத்து பேசி தீர்வு காணும் வகையில் போராட்டத்தை முடித்து வைத்தார் தமிழர்களம் கோ.அழகர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death due to unauthorized auto accident Tamilian Alagar condemns


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->