சுகாதார உதவியாளர் பணி நியமனத்தில் குழப்பம்... மாணவர்கள் கூட்டமைப்பு கண்டனம்!
Confusion in the appointment of health assistants Student union condemns
புதுச்சேரியில் நடந்து முடிந்த சுகாதார உதவியாளர் பணி நியமனத்தில் குழப்பம் ! பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ! நேற்றைய தினம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வில் குளறுபடி !
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளது .
புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள சுகாதார உதவியாளர் பணி நியமனத்திற்கு கடந்த 02.06.2025 அன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பானை மீண்டும் மறு அறிவிப்பாணையாக 06.08.2025 அன்று அறிவிக்கப்பட்டது, இந்த அறிவிப்பாணையின் தேர்வு முதல் தாள் 23.08.2025 , இரண்டாம் தாள் 24.08.2025 என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது, தேர்வின் முடிவுகள் 03.09.2025 அன்று வெளியிடப்பட்டது,
இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அன்றே எமது அமைப்பு தேர்வு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தோம், இந்த புகார் கடிதத்தில் அறிவிப்பாணையில் அறிவிக்கப்பட்டது போல் தேர்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியிருந்தோம். எமது அமைப்பின் குற்றச்சாட்டிற்கு செவி மடிக்காமல் தேர்வு முடிவுகளை அறிவித்து 491 பேர் விண்ணப்பித்து முதல் தாள் 296 பேரும் இரண்டாம் தாள் 300 பேரும் எழுதினர் இதில் முதல் தாள் தேர்வு மதிப்பெண் தகுதி அளவுகோலாக ஏற்கப்படாது என தேர்வாளரிடம் கூறியிருந்த நிலையில் , தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட போது முதல் தாள் மதிப்பெண்ணையும் தேர்வு அளவுகோலாக அறிவித்திருந்ததனால் இப்பணிக்கு விண்ணப்பித்திருந்த தகுதி வாய்ந்த துறை அறிவு கொண்ட பலர் ஏமாற்றம் அடைந்தனர். நேற்றைய தினம் 30.09.2025 அன்று தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
அறிவிப்பாணையில் அறிவிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலாத சிலர் இத்தேர்வில் தேர்வாகி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக சுகாதாரத் துறைக்கு சம்பந்தமில்லாத தமிழ் பாடத்தில் இளங்கலை முடித்த ஒரு சிலர் இத்தேர்வில் வெற்றி பெற்று நேற்று அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது தேர்வு கட்டுப்பாட்டு குழு ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக எமது அமைப்பு குற்றச்சாட்டுகளையும் பல்வேறு வழக்குகளையும் தொடுத்து வந்தும் அரசு நிர்வாகத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணம்தான் பணி நியமனங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான குழப்பங்கள் தொடர்கிறது
சுகாதார உதவியாளர் பணி நியமன முதல் தாள் தேர்வில் பத்தாம் வகுப்பு அடிப்படைக் கல்வி என அறிவித்த புதுச்சேரி அரசு பிறகு சிபிஎஸ்சி பாடம் என அறிவித்தது ஆனால் தேர்வு தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL ) பாடமுறையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதனால் தேர்வாளர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.
சுகாதார உதவியாளர் பணிக்கு துறை சார்ந்து படித்த பல இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர் இந்த நிலைதான் கூட்டுறவு ஆய்வாளர் பணி நியமனத்திலும் ஊர்க்காவல் படை தேர்வு நிலையம் அனைத்திலும் நடந்தது இதே தவறினை மீண்டும் சுகாதார உதவியாளர் பணி நியமனத்திலும் அரசு பணி நியமன தேர்வு கட்டுப்பாட்டு குழு செய்துள்ளது
இத்தகைய ஏமாற்றத்திற்கு எதிராக துறை சார்ந்த தகுதி வாய்ந்த சிலர் , உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக அறிகிறோம். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பில் சுகாதார உதவியாளர் பணி பற்றி எந்த ஒரு முன்னறிவும் இல்லாத நபர்கள் இப்பணிக்கு தேர்வாகியுள்ளதும் சில பல் மருத்துவர், ஆம்புலன்ஸ் உதவியாளர், சித்தா மருத்துவர் உள்ளிட்டவர்கள் தேர்வாகி இருப்பது சுகாதார உதவியாளர் பணிக்காக படித்து பட்டயம் பெற்ற பல இளைஞர்கள் ஏமாந்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
இத்தகைய சூழல் எதிர்கால புதுச்சேரியின் நிர்வாக சீர்கேடுகளை உருவாக்கும் . துறை சார்ந்த கல்வி அறிவற்றவர்கள் ஒவ்வொரு துறையிலும் நிரப்புவது அந் நிர்வாகத்தினை சீரழிப்பதோடு அந்த நிர்வாகத்தின் வளர்ச்சியை தடுக்கும் என எமது அமைப்பு தொடர்ச்சியாக எச்சரிக்கை தெரிவித்துக் கொள்கிறது புதுச்சேரி அரசு பணியாளர் நியமன தேர்வு குழுவின் அக்கறையற்ற செயலை கண்டிக்கவோ தடுக்கவோ புதுச்சேரி மாநிலத்தில் ஆளுமரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தைரியம் இல்லையா என்ற கேள்வியை எமது அமைப்பு எழுப்புகிறது என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன்தெரிவித்துள்ளார்,
English Summary
Confusion in the appointment of health assistants Student union condemns