பேயை பார்த்து பயப்படுவதை விட ஏ.ஐ.யை பார்த்து பயப்பட வேண்டி உள்ளது; சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணியில் நடிகர் சந்தானம் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை பெருநகர காவல் துறை சார்பில் மெரினா காமராஜர் சாலையில் சைபர் கிரைம் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் (பொறுப்பு) கார்த்திகேயன், துணை ஆணையர்கள் ஸ்ரீநாதா, கீதாஞ்சலி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்துக்கொண்டார். அங்கு அவர் பேசுகையில் கூறியதாவது:

பேயை பார்த்து பயப்படுவதை விட இப்போ ஏ.ஐ.யை பார்த்து பயப்பட வேண்டி இருக்கிறது. வாழைக்காய் பஜ்ஜி போடுவன் போல, செல்போனை நோண்டிக்கொண்டே இருக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏடிஎம் ஒடிபி கேட்டாலும், சைபர் கிரைம் போலீசார் பேசுகிறோம் என யாராவது உங்களை தொடர்பு கொண்டாலும் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிப்பதன் மூலம் பணம் பறிபோவதை தடுக்க முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில், சைபர் கிரைம் துணை ஆணையர் ஸ்ரீதா பேசுகையில் கூறியதாவது:

இன்வெஸ்ட்மென்ட் ஃபிராடு ,டிரேடிங் ஃ பிராடு என விதவிதமான சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன என்றும், கடந்தாண்டு ஒரு நபரிடம் இருந்து 24 கோடி ரூபாயை சைபர் மோசடி கும்பல் பறித்துள்ளது. இந்த சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் ஹரியானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 146 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 113 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 கோடியே 47 லட்சம் ரூபாய் சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Santhanam speaks that we have to fear AI more than ghosts


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->