கோவையில் 'அமைச்சரின் அண்ணன் மகன்' எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிக் கேட்டு பங்க் ஊழியரைத் தாக்கிய நபர்..!
A man in Coimbatore got into an argument after claiming to be the son of a ministers nephew and asking for petrol in a bottle
கோவை காந்திபுரம் அருகே பாட்டிலில் பெட்ரோல் கேட்டு, பங்க் ஊழியரைத் தாக்கி காயப்படுத்திய, நபர் அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, பங்குகளில் கேனில் பெட்ரோல் வழங்க கூடாது என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த நடைமுறை தற்போது வரை நீடிக்கிறது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பங்க் ஒன்றில், நபர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் கேட்டு சென்றுள்ளார். ஆனால் பங்க் ஊழியர், பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க முடியாது என கூறி, மறுத்துள்ளார்.

அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பெட்ரோல் கேட்டு வந்த நபர் "தான் தவெக அமைச்சரின் அண்ணன் மகன்" எனக் கூறி பங்க் ஊழியரிடம் தகராறு செய்துள்ளார். அதை தட்டி கேட்டபோது ஊழியர் பிரசாத்தை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தவெக அமைச்சரின் அண்ணன் மகன் எனக் கூறி தாக்குதலில் ஈடுபட்டவர் யார்? எங்கிருந்து வந்தவர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்படி, கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா மற்றும் மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீஜெயசங்கரன் ஆகிய இருவரை, கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A man in Coimbatore got into an argument after claiming to be the son of a ministers nephew and asking for petrol in a bottle