வைகை ஆறு விவகாரம்; ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!
Udhayanidhi Stalin questions whether the Governor will allow his investigation amid anxiety over whether he will take action
மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் இன்று நடைபெற்ற INA-வின் "வேர்களைத் தேடி" கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த விழாவில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ''நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் உதவியாளர் வைகை ஆற்றை காண்பித்தார். ஆறு இருக்கிறது. ஆனால், நீர் எங்கே என ஆச்சரியப்பட்டேன். ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். எனவே இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நான் அவரிடம் சொன்னேன். மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் இதனை இலக்காக மாற்றி அதற்காக முயற்சி செய்ய வேண்டும். யாராவது இதற்கு முயற்சி எடுக்க வேண்டும். யாரும் முயற்சி எடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும்'' என பேசியிருந்தார்.

ஆளுநரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?” என முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''ஆளுநர் ஆய்வு செய்தார் என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள். ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin questions whether the Governor will allow his investigation amid anxiety over whether he will take action