வறுமையின் விளிம்பில் நின்ற மூத்த கலைஞன்; தனது சொந்த அரசு குடியிருப்பை கொடுத்து உதவிய அமைச்சர் ராஜ்மோகன்..! - Seithipunal
Seithipunal


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, வீடின்றி வறுமையில் தவித்து வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனுக்கு, தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு எம்.எல்.ஏ., குடியிருப்பை தமிழ்நாடு பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் தற்காலிகமாக வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துத் புகழ் பெற்றவர் நடிகர் பாவா லட்சுமணன். குறிப்பாக, 'மாயி' திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அவர் பேசிய "வாம்மா மின்னல்" என்ற ஒரே ஒரு வசனம், இன்றளவும் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்றாகும்.

தமிழ் திரையுலகில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வரும் இவர், தொடக்கத்தில் விக்ரமனின் திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராகவும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கடந்த சில வருடங்களாகக் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, அண்மையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விபத்து மற்றும் நோய் பாதிப்பு காரணமாக, அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் உள்ள 03 விரல்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. சக கலைஞர்களான ஜீவா மற்றும் கே.பி.ஒய் பாலா ஆகியோர் செய்யும் நிதியுதவியைக் கொண்டுதான் என் நாட்கள் நகர்கின்றன. இன்னும் பிச்சை எடுக்காத குறைதான். தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் தவிக்கிறேன்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தனக்கு வாழ்வாதார உதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார்.

நடிகர் பாவா லட்சுமணனின் இக்கட்டான சூழ்நிலையை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு எம்.எல்.ஏ., குடியிருப்புக்கான வீட்டை, தங்குவதற்கு இடமின்றித் தவித்த பாவா லட்சுமணனுக்கு அவர் உடனடியாகப் உதவியாகா கொடுத்துள்ளார்.

அதாவது, ''இன்னும் ஆறு மாத காலத்திற்கு நீங்கள் இந்த வீட்டிலேயே தங்கி உங்களது உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதற்குள் உங்களுக்கு நிரந்தரமாகச் சொந்த வீடு ஒன்றினை ஏற்பாடு செய்து தருகிறேன்" என உறுதியளித்துள்ளார். வறுமையின் பிடியில் நின்ற மூத்த கலைஞனுக்கு, மக்கள் பிரதிநிதியான அமைச்சர் தனது சொந்த அரசு குடியிருப்பையே ஒதுக்கித் தைரியம் கொடுத்த  இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A touching incident where Minister Rajmohan helped comedian Bava Lakshmanan by giving him his own government residence


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->