ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்; முதல்வர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை கூட்டம் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில்  தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நடப்பில் உள்ள திட்டங்களின் செயல்பாடு மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான துறை வாரியான ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 22 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ், மரிய வில்சன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, பிற்பகலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதன் போது அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வெற்றி தமிழகம் தொலை நோக்கு திட்டத்தில் இடம் பெற்றுள்ள திட்டங்களை ஓர் ஆண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு என செயல்படுத்துவது குறித்தும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெறக்கூடிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி தேவைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A department wise consultation meeting led by Chief Minister Vijay begins regarding the first budget of the TVK government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->